ஹோம் /நாமக்கல் /

செவ்வாய் கிழமை ராகு காலத்தில் சிறப்பு வழிபாடு: திருச்செங்கோட்டிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் தெரியுமா?

செவ்வாய் கிழமை ராகு காலத்தில் சிறப்பு வழிபாடு: திருச்செங்கோட்டிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் தெரியுமா?

திருச்செங்கோடு துர்க்கை அம்மன் கோவில்

திருச்செங்கோடு துர்க்கை அம்மன் கோவில்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள துர்க்கை அம்மன் கோவிலில் ராகு காலத்தில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராகுகால நேரத்தில் அம்மனை வழிபாடு செய்தால், வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களுக்கும் கூடிய சீக்கிரத்திலேயே தீர்வு காண முடியும் என்றும், குறிப்பாக செவ்வாய் கிழமையில் வரும் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினால் பலன்கள் கிடைக்கும் என்று துர்க்கை அம்மன் கோயில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.

  பொதுவாக ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் இந்த ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு பூஜைகள் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று கருதுகின்றனர். இதற்காகவே தனியொரு கோயில் நம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.

  இக்கோயில் திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பல வருடங்களுக்கு முன்பு சிறிய சதுர அமைப்புக் கொண்ட ஒரு அறையில் ‌சிலையுடன்  உருவாகி உள்ளது. பின்னர் அங்கு உள்ளவர்களுக்கு அச்சிலை துர்க்கை அம்மனாக காட்சியளித்து வருவதாக கூறுகின்றனர்.

  இக்கோயில் பல ஆண்டுகளாக மண் மற்றும் புதர்களாக இருந்துள்ளது‌. அதன் பின் இக்கோயிலுக்கு ஒரு கோபுரம் அமைத்து வழிபட தொடங்கி உள்ளனர். கோயிலின் சிறப்பம்சங்களைப் பார்க்கும் போது மாரியம்மன் கோயில்களில் மற்றும் பெரிய பெரிய கோயில்களில் துர்க்கை அம்மன் ஒரு சிறிய பகுதியில் இடம்பெற்று இருக்கும்.

  இங்குள்ள துர்க்கை அம்மன் கோயிலில் தனியாக கோபுரம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் துர்க்கை அம்மனுக்கு கோபுரம் கிடையாது என்று குறிப்பிடத்தக்கது. மேலும் சன்னதிக்கு அருகில் இரண்டு காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

  இக்கோயிலில் செவ்வாய் கிழமைகளில் ராகு நேரத்தில் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இதனால் இங்கு செவ்வாய் கிழமை தோறும் ராகு காலத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடத்துகின்றனர்.

  துர்க்கை அம்மனுக்கு கோவிலுக்குச் செல்லும் வழிக்கான கூகுள் மேப்:

  மேலும் நீண்ட காலமாக திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குடும்ப பிரச்சனைகள் என இருந்தால் துர்க்கை அம்மனுக்கு ராகு நேரத்தில் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் நிறைவேறும் என்று கூறுகின்றனர்.

  இதற்காக பல உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்து வேண்டுதல் வைத்து விட்டு செல்கின்றனர். நவராத்திரி அன்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பாக முறையில் கொண்டாடப்படுகிறது.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal