Home /namakkal /

புரட்டாசி சனிக்கிழமை : நைனாமலை பெருமாளை வழிபட சிறப்பு ஏற்பாடு

புரட்டாசி சனிக்கிழமை : நைனாமலை பெருமாளை வழிபட சிறப்பு ஏற்பாடு

நைனாமலை வரதராஜ பெருமாள் வழிபட சிறப்பு ஏற்பாடுகள்

நைனாமலை வரதராஜ பெருமாள் வழிபட சிறப்பு ஏற்பாடுகள்

NAMAKKAL : நாமக்கல் மாவட்டத்தில், வரும் 17ம் தேதி புரட்டாசி முதலாம் சனிக்கிழமை துவங்குகிறது. இதையயொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல் மாவட்டத்தில், வரும் 17ம் தேதி புரட்டாசி முதலாம் சனிக்கிழமை துவங்குகிறது. இதையயொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுவாமி தரிசனத்திற்கு இலவசம் மற்றும் சிறப்பு கட்டண முறை ரூ. 5 மற்றும் ரூ. 25-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலை மீது பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். 3,600 படிக்கட்டுகளை கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் மலையில் உள்ள பெருமாளை தரிசிக்க செல்வர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மலைப் பகுதிக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடிவாரப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உற்சவர் சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். தற்போது கொரோனா தொற்று தடை முழுமையாக நீங்கி விட்டதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் மலையில் உள்ள பெருமாளை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விவசாயிகள் கவனத்திற்கு... முந்துங்கள் நாமக்கல்லில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்


மாத ஒவ்வோர் ஆண்டும், ஆவணி மாத கடைசி சனிக்கிழமை புரட்டாசி மாதத்தின் முதலாம் சனிக்கிழமையாகவும் ஐப்பசி முதல் சனிக்கிழமை புரட்டாசி மாத சனிக்கிழமையாகவும் கணக்கிடப்பட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அந்த வகையில், செப். 17, 24, அக்.1, 8, 15, 22 ஆகிய 6 நாள்கள் புரட்டாசி சனிக்கிழமை திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

நைனாமலை பெருமாள் கோயில் செயல் அலுவலர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளதாவது:-

ஒவ்வொரு வாரமும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் கோயில் நடை திறந்திருக்கும். சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடை மூடப்படும். அன்று காலை 9 மணியளவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பக்தர்கள் வருகைக்காக மலைப்பகுதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், குடிநீர், கழிவறை வசதிகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மலை மீது செல்ல முடியாதோருக்காக அடிவாரப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உற்சவர் சிலை வைத்து பூஜைகள் நடைபெறும். ரூ.5 மற்றும் ரூ.25 என்ற சிறப்புக் வரிசை ஏற்படுத்தப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீஸார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா். முடி காணிக்கை செலுத்துத் வோருக்கு தேவையானகுளியல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. புரட்டாட் சி சனிக்கிழமைகளில் மலைக் கோயிலுக்குசெல்லும் பக்தா்கள், பொது மக்கள் பாதுகாப்புடன் சென்று வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி