ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கும் இடங்கள் தெரியுமா?  

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கும் இடங்கள் தெரியுமா?  

நாமக்கல்

நாமக்கல்

Namakal District | நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த மாதத்தில் கால்நடைகளுக்கு  சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதில், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், ஜிஎல்பி அறுவை சிகிச்சை உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த மாதத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதில், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், ஜிஎல்பி அறுவை சிகிச்சை உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.

கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாமக்கல்லில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

அக்டோபர் மாதம் முகாம்கள் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவுபெறவுள்ளது. இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல். நோய்களுக்கு எதிரான சிகிச்சைகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், ஜிஎல்பி அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்குஇலவசமாக மேற்கொள்ளப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராமங்களில் நடைபெற உள்ள முகாம்கள் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்துவர்களால் அறிவிக்கப்படும் நாளில் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளை அழைத்து சென்று பயனடையுமாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் கேட்டுக்கொண்டார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal