Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா? 

நாமக்கல் மாவட்டத்தில் மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா? 

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்...

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்...

Namakkal power cut | நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை ( புதன்கிழமை  கிழமை)   மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல் மாவட்டத்தில் மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை ( புதன்கிழமை கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை ஏற்படும் பகுதிகள்: நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

குமாரபாளையம் வட்டம் சமயசங்கிலி துணை மின்நிலையத்தில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
மின் தடை ஏற்படும் இடங்கள்: -

சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஒட்டமெத்தை மற்றும் ஈரோடு மாவட்டம் பிராமண பெரிய அக்ரஹாரம், சத்திரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, நெறிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைரம்பாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்க: நாமக்கலில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க மானியம் அறிவிப்பு

ஆனங்கூர் துணை மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்கள்:-

தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டு பாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தா கோவில், பி.ஜி.பாளையம், பள்ளி கவுண்டம்பாளையம், ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியம் பாளையம், ஆண்டிகாடு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Local News, Namakkal, Power cut

அடுத்த செய்தி