Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 22) முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 22) முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

மின்தடை

மின்தடை

நாமக்கல்  மாவட்டம்  காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில்   நாளை(செப்டம்பர் 22) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ( வியாழக் கிழமை கிழமை) 22ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் சார்பில் அறிவித்துள்ளது.

    Also Read : சித்தர் குகைகள் முதல் படகு இல்லம் வரை.. கொல்லிமலையில் வியக்க வைக்கும் சுற்றுலாத்தலங்கள்

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: நாமக்கல் நாகாளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்போது பொது மக்களுக்கு சரியாக மின் விநியோகம் செய்ய முடியாது என்றும் மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal, Power cut

    அடுத்த செய்தி