Home /namakkal /

அஞ்சல் இன்சூரன்ஸில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு- முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்

அஞ்சல் இன்சூரன்ஸில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு- முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வங்கிச் சேவைகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சூழலில் பலரும் அஞ்சல் சேவைகளைப் பற்றி தெரிந்துகொள்வதில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    அஞ்சலகங்களில் தற்போது, விபத்து காப்பீடு 10 லட்ச ரூபாய் பெறும் வகையில் புதிய இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாசிலி மூலம் விபத்து மட்டும் இல்லாமல், ஊனம், பக்க வாதம் போன்ற நோய்களுக்கும் இழப்பீடும் பெற முடியும். இந்த திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்று பார்க்கலாம்.

    காப்பீடு திட்ட பலன், சாமானிய மக்களையும் சென்றடையும்படி, அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரீமியம் தொகையில், விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது. அதற்கான வயது 18 முதல், 65க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எந்த காகித பயன்பாடின்றி வீடு தேடி தபால்காரர் கொண்டு வரும், 'ஸ்மார்ட் போன்', விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில், 'டிஜிட்டல்' முறையில், பாலிசி திட்டத்தில் இணையலாம். விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு 10 லட்ச ரூபாய் வரை விபத்து காப்பீடு பெறலாம்.

    விபத்தில் உள்நோயாளி செலவுக்கு அதிகபட்சம், 60 ஆயிரம் ரூபாய், புறநோயாளி செலவுக்கு அதிகபட்சம், 30 ஆயிரம் ரூபாய், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இரு குழந்தைகள் கல்வி செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப்படியாக, தலா, 1,000 வீதம் 9 நாளுக்கு கிடைக்கும்.

    விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும், குடும்பத்தினரின் பயண செலவுக்கு, அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய். இறுதிச் சடங்கு செய்ய, 5,000 ரூபாய் உண்டு. இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு 399 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் போதும்.

    விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம், எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து ஓரளவு குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி, இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து மக்கள் பயன்பெறலாம்.

    மேலும், இந்த திட்டத்தை பெற அந்தெந்த பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என்று தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி