Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

நாமக்கல் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்...

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்...

NAMAKKAL : நாமக்கல் மாவட்டத்தில்  மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், பரமத்திவேலூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ( சனிக் கிழமை  ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், பரமத்திவேலூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை- கிடைக்கும் இடங்கள் இதோ.! 


ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், பரமத்திவேலூர் துணை மின் நிலையங்களில் மின் நிலையத்தில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன், செயற்பொறியாளர் ராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பரமத்திவேலூர்: வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி