ஹோம் /நாமக்கல் /

தேவாரப் பாடல் பெற்றத் தலமான அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் சிறப்புகள் தெரியுமா?

தேவாரப் பாடல் பெற்றத் தலமான அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் சிறப்புகள் தெரியுமா?

நாமக்கல் அர்த்தநாரீஸ்வரர்

நாமக்கல் அர்த்தநாரீஸ்வரர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. சிவனும் பார்வதியும் ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கிறார்கள். அழகிய மலையின்மீது அமைந்துள்ள அற்புதமான திருக்கோயில் இது. அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாக இருக்கிறது. இந்த மலைக்கோயிலைப் பற்றி சில தகவல்களை இங்கு காண்போம்.

  அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலுக்கு என்று பல பெயர்கள் உண்டு. இதில் குறிப்பாக மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்றும், தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி என்றும்‌ அழைக்கப்படுகிறது.

  மலைக்கோயில் வரலாறு என்று பார்த்தால் அக்காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிந்துகொள்ள இருவரும் போர் புரிந்துள்ளனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர்.

  அர்த்தநாரீஸ்வரர் கோவில்

  ஆதிஷேசன் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்திக்

  கொள்ள வேண்டும். வாயு தேவன் தன் பலத்தால் பிடியைத் தளர்த்த வேண்டும் என்று அடக்கி கொண்டார். இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு ஆதிஷேசன் வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர்.

  அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பங்கள்

  ஆதிஷேசன் தன் பிடியைக் கொஞ்சம் தளர்த்தி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியில் வேகமாக மோதியுள்ளார். இதனால்

  அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்துள்ளது. அந்த சிதறி விழுந்த பாகங்களில் ஒன்று திருவண்ணாமலை, இலங்கை, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையாகவும் தோன்றி உள்ளது.

  இக்கோயில் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், மலை ஏறும் போது 60 அடி நீளத்தில் ஐந்து தலை கொண்ட நாகம் உருவம் உள்ளது.

  இத்திருக்கோயில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் உள்ளது. மார்கழி மாதத்தில் மட்டும் வழிபட கூடிய பிருங்கி முனிவரால் வழிபட்ட மரகதலிங்கம் உள்ளது.

  இதனை காண மார்கழி மாதத்தில் அதிக காலையில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை புரிவார்கள். அதுமட்டுமின்றி பௌர்ணமி கிரிவலம், மாசி மகம் என நிகழ்வுகள் நடைபெறும். குறிப்பாக இக்கோயில் திருவிழா வைகாசி விசாக தேர்த் திருவிழாவாக வெகு விமரிசையாக நடைபெறும்.

  இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றால் மலை அடிவாரப் பகுதியை அடைந்து விடலாம். மலை மீது ஏறுவதற்கு 1,250 படிக்கட்டு கொண்ட மலையாக இக்கோயில் உள்ளது. மேலும் மலைக் கோயிலுக்கு செல்ல 3 கிலோமீட்டர் கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

  பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என செல்லும் வகையில் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு அம்சங்கள் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் திருச்செங்கோடு நகர பகுதியில் கம்பீரமாக எழுந்து மக்கள் காட்சியளிக்கிறது.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal