தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் 2 நாட்கள் நடைபெற்றன. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்திலும் நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த பணியில் வனத்துறையினர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். முதல் நாளில் ஜேடர்பாளையம், பருத்திப்பள்ளி, இடும்பன்குளம், தூசூர், வேட்டாம்பாடி, தும்பல்பட்டி, புதுச்சத்திரம், கோனேரிப்பட்டி, உள்ளிட்ட 18 ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது.
இந்த நீர்நிலைகளில் மண்கொத்தி, ஆற்று மண்கொத்தி, ஊசிவால் வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, கிளுவை, மஞ்சக்கால் கொக உள்ளான், காட்டு கீச்சான், சாம்பல் கொக்கு, நத்தை குத்தி நாரை, சங்குவளை நாரை, பவளக்கால் உள்ளான் உள்ளிட்ட பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், வெளிநாட்டு பறவை இனங்களான ஆசியன் ஓப்பன்பில் உள்ளிட்ட பறவை இனங்களும் மொத்தமாக 18 ஏரிகளில் 110 வகைகளை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றுள் 1,600 பறவைகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
Must Read : பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!
இந்த பகுதிகளில் 38 புதிய வகை நீர்ப்பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகமாக இருப்பதால், பறவை இனங்களின் வரத்து அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Birds, Local News, Namakkal