Home /namakkal /

பேச்சுத்திறன் கொண்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரா நீங்கள்? உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு..

பேச்சுத்திறன் கொண்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரா நீங்கள்? உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு..

நாமக்கல் - பேச்சுப்போட்டி

நாமக்கல் - பேச்சுப்போட்டி

Namakkal District News : மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 28-ந் தேதி காலை 9.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    நாமக்கல் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான பரிசுகள் மற்றும் பிற விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்..

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் அதன் பின் கடந்த மாதம் 3-ந் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழ் களும் வழங்கப்பட்டது.

    மேலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் 12-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைப்பெற்றதால் இவர்களுக்கான பேச்சுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    தற்போது, இவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 28-ந் தேதி காலை 9.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பள்ளி மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி