ஹோம் /நாமக்கல் /

மாவட்ட அளவிலான தடகள போட்டி - நாளை மறுநாள் நாமக்கல்லில் தொடக்கம்

மாவட்ட அளவிலான தடகள போட்டி - நாளை மறுநாள் நாமக்கல்லில் தொடக்கம்

தடகளப்போட்டி

தடகளப்போட்டி

Namakkal District | நாமக்கல்லில் மாவட்ட அளவிலான ஜூனியர் அத்லெட்டிக் சாம் பியன்ஷிப் போட்டிகள் வெளிக்கிழமை (அக்டோபர் 7) தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில், ஆண்களுக்கான முதலாவது ஜூனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, 7ம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்குகிறது.

இந்த போட்டிக்கு மாவட்ட அத்லெட்டிக் அசோசியேசன் தலைவரும், எம்.பி.யுமான சின்ராஜ் தலைமை வகிக்கிறார். நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலை வகிக்கிறார்.

இந்த போட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடக்கி வைக்கிறார். எம்.பி., ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம் மற்றும் பொன்னுசாமி, மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன் துணைத்தலைவர் நடராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க : நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சார்ந்து படித்தோருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி.!

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அத்லெட்டிக் அசோசியேஷன் புரவலர்கள் செல்வராஜ், செங்கோடன், துணைத்தலைவர் அசோக்குமார், நாமக்கல் டி.எஸ்.பி. மற்றும் சுரேஷ் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.

இதனைத்தொடர்ந்து வரும் 8ம் தேதி, மகளிருக்கான முதலாவது ஜூனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, விளையைாட்டுத்துறை ஆய்வாளர் (பொ) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர், ஆகியோர் பரிசு வழங்குகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal