முகப்பு /நாமக்கல் /

"இதை சாப்பிடணுமா" மாத்திரை சாப்பிட கலாட்டா செய்த குழந்தைகளை கண்டு ரசித்த ஆட்சியர்!

"இதை சாப்பிடணுமா" மாத்திரை சாப்பிட கலாட்டா செய்த குழந்தைகளை கண்டு ரசித்த ஆட்சியர்!

X
மாத்திரை

மாத்திரை வழங்கிய ஆட்சியர்

Namakkal Childrens | நாமக்கல்லில் பள்ளிக் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல் காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது.

பள்ளிக் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தார். அப்போது ஒவ்வொரு குழந்தையும் வரிசையாக குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியரிடம் வாங்கி சாப்பிட்ட போது அவர்களின் முக பாவனைகளை பார்த்து ஆட்சியர் ரசித்தார்.

தேசிய குடற்புழு நீக்க முகாமினை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கப்பட்ட நிலையில் கைகளை குழந்தைகள் எவ்வாறு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,18,438 நபர்களுக்கும், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்கள் 1,53,830 நபர்களுக்கும் என மொத்தம் 6,72,268 நபர்களுக்கு குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Namakkal, School students, Tablets