முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. இனி கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்.!

நாமக்கல் விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. இனி கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்.!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal news | விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Namakkal, India

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயைபெருக்கவும் தமிழக  அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின்நாஃபெட்நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ளூர்சந்தைகளில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.75.00 முதல் ரூ.85.00 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன்கருதிக்குறைந்த பட்ச ஆதரவு விலையில் (கிலோ ஒன்றுக்கு அரவைக் கொப்பரை ரூ.108.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.117.50 விலையில்) கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் திட்டம்பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் கொப்பரை தேங்காய் விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின்வங்கிகணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தற்போது கொப்பரை கொள்முதல் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல்மாதம் முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரை கொப்பரை கொள்முதல் செய்யப்படும். தென்னை விவசாயிகளின் நலன் கருதி மேற்கொண்டுள்ள இத்திட்டத்தில் தென்னை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Agriculture, Local News, Namakkal