முகப்பு /நாமக்கல் /

நோயில்லா சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்.. நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்..!

நோயில்லா சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்.. நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்..!

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்

Namakkal News : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களாக முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் 2வது இடத்திலும், முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்திலும் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. இங்கு உள்ள பண்ணைகளில் உற்பத்தி ஆகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், துபாய், சிரியா, ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி ஏற்றுமதியாகி வருகின்றன. இந்த நாடுகளுக்கு தற்போது மாதந்தோறும் சுமார் 150 கன்டெய்னர் முட்டை ஏற்றுமதியாகி வருகிறது.

முதன் முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியாவிற்கு முட்டைகள் ஏற்றுமதி ஆக தொடங்கியது. மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும் அங்கு தினசரி 3 கோடி முட்டை தேவை உள்ளது. இதன் காரணமாக நாமக்கல் பகுதிகளில் இருந்து சுமார் 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 10 கன்டெய்னர் மூலம் 50 லட்சம் முட்டைகள் முதன் முதலாக மலேசியாவிற்கு ஏற்றுமதியானது. தொடர்ந்து முட்டைக்கான ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது. இந்த சூழலில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மலேசியா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. (பவுல் காலரா, ND Test, சால்மனலா பாக்டீரியா) 3 விதமான நோயில்லா சான்றிதழ் இருந்தால் மட்டுமே முட்டைகள் இறக்குமதி செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்க வேண்டும். தற்போது அந்த சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால் கடந்த 40 நாட்களாக நாமக்கல் பகுதியில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக தடையில்லா சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் நாமக்கல் பகுதியில் இருந்து மலேசியாவிற்கு மாதந்தோறும் சுமார் 50 கன்டெய்னர் முட்டைகள் ஏற்றுமதி ஆக வாய்ப்புள்ளது. மத்திய அரசு 3 விதமான நோயில்லா சான்றிதழ் வழங்கினால் மலேசியா மட்டுமின்றி ஏனைய நாடுகளுக்கும் நாமக்கல் பகுதியில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் இருக்காது.

துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டில் இருந்து முட்டைகள் வாங்கி வந்த நாடுகள் தற்போது இந்தியாவில் இருந்து முட்டைகள் வாங்க அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 10 நாட்களுக்கு 10 கன்டெய்னர் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Namakkal