முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் குமாரபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபம்!

நாமக்கல் குமாரபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபம்!

X
தியான

தியான மண்டபம்

Namakkal | இந்த மயானத்தின் வளாகத்தில் குமாரபாளையம் ரோட்டரி கிளப் மற்றும் குமாரபாளையம் நகராட்சியும் இணைந்து சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் தியான மண்டபம் கட்டுமான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோட்டரி கிளப் சார்பில் கட்டப்பட்ட தியான மண்டபத்தை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட கலைமகள் வீதியில் எரிவாயு மயானம் உள்ளது. இந்த மயானம் தற்பொழுது குமாரபாளையம் ரோட்டரி கிளப் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மயானத்தின் வளாகத்தில் குமாரபாளையம் ரோட்டரி கிளப் மற்றும் குமாரபாளையம் நகராட்சியும் இணைந்து சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் தியான மண்டபம் கட்டுமான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

இந்தப் பணிகள் முடிவடைந்து இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தியான மண்டபத்தை குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், குமாரபாளையம் ரோட்டரி கிளப் ஆளுநர் சரவணன் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Namakkal