தமிழகத்தை சேர்ந்த முதியவர் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (72). 1980ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பைக்கு சென்று அங்கு சலவைத் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தனது மூன்று பிள்ளைகளை கரை சேர்த்த பின்னர் தமிழகம் திரும்பினார் பூல்பாண்டி.
ஆதரவுக்கு யாருமில்லாததால் தனக்கு தேவையானவற்றை வாங்க முழு நேர யாசகரானார். தன் தேவைகளை குறைத்து யாசகம் பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது,கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம், முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவது என அந்த பணத்தை செலவிட்டு வருகிறார் பூல்பாண்டி.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில் தான் யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி விட்டு அதற்கான ரசீதை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து விட்டு சென்றார். மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை.... பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை... என்ற பாடல் வரிகள் தான் அவரைபார்த்தும் நமக்கு நினைவுக்கு வந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal