ஹோம் /Namakkal /

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சூரியம்பாளையத்தில் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்!

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சூரியம்பாளையத்தில் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்!

namakkal

namakkal

Namakkal District | நாமக்கல் சூரியம்பாளையம் பகுதியில் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல்லில் இருந்து பள்ளிபாளையம் செல்லும் வழியில் காவல்துறை குடியிருப்பு அருகில் சூரியம்பாளையம் கருப்பனார் கோயில் KKCC நண்பர்கள் குழு சார்பாக கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களையும் மற்றும் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

  இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மட்டும் இல்லாமல் முதல் ஐந்து இடங்கள் வரும் அணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுத் தொகையும், சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

  இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் நம்மிடம் பேசும்போது, “விளையாட்டு துறையில் இளைஞர்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறோம்.

  கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால் சற்று கவலையாக இருந்தது. தற்போது இந்தாண்டு பெரிதளவில் நடத்த வேண்டும் என்று பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடத்தினோம். மேலும் இந்த போட்டி டென்னிஸ் பந்தில் கொண்டு பாக்ஸ் மேட்ச் போன்று நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இனி வரும் வருடங்களில் தொடர்ச்சியாக இதை விட பெரிய அளவிலான போட்டிகள் நடத்த வேண்டும் என்று எண்ணம் உள்ளது” என்று தெரிவித்தனர்.

  செய்தியாளர்: மதன்-நாமக்கல்

  Published by:Arun
  First published:

  Tags: Cricket, Namakkal