முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கெடுக்கும் பணி

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கெடுக்கும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Namakkal News : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்டு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

இந்திய தேர்தல் ஆணையம் 15 ஆண்டுகளை கடந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூருவில் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்டு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட 251 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்குப்பதிவு இயந்திரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள், பெல் நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டனர். கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு அனைத்து பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal