Home /namakkal /

நாமக்கலில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்- விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கலில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்- விவசாயிகள் மகிழ்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 45 லட்ச ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சந்திரசேகரபுரம், மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி, முருங்கபட்டி, அம்மாபாளையம் , அணைப்பாளையம், மின்னக்கல், பாச்சல், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்திகளை கொண்டு வந்தனர்.

    இதில், 1,304 பருத்தி மூட்டைகளை 45 லட்ச ரூபாய்க்கு கோவை, பல்லடம், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.

    இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரக பருத்தி 858 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 399 மூட்டைகளும், கொட்டு பருத்தி 47 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் 9,369-ரூபாய்க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் 11,342 ரூபாய்க்கும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக 9,312 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் 11,242-ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6,505 முதல் அதிகபட்சமாக ரூ.8,005-க்கும் ஏலம் விடப்பட்டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி