Home /namakkal /

நாமக்கலில் ரூ.1.10 கோடிக்கு ஏலம் போன பருத்தி

நாமக்கலில் ரூ.1.10 கோடிக்கு ஏலம் போன பருத்தி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், 3,300 மூட்டைகள், 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

    நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், 3,300 மூட்டைகள், 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

    இந்த சங்கத்தில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறும். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்த பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

    நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், ஏலத்துக்கு, 3,300 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர்.

    இதில், ஆர்.சி.ஹெச் ரக பருத்தி, குவிண்டால் ஒன்று குறைந்தபட்சம், 8,699 ரூபாய்க்கும், அதிகபட்சம், 10,999 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    சுரபிரகம், குறைந்தபட்சம், 10,050 ரூபாய்க்கும், அதிகபட்சம், 11,399 ரூபாய்க்கும் ஏலம் போனது. அதே போல் கொட்டு ரகம் குறைந்தபட்சம் 3,699 ரூபாய்க்கும், அதிகபட்சம் 8,699 ரூபாய்க்கும் ஏலம் போனது. 3,300 மூட்டை பருத்தி மொத்தமாக 1.10 கோடி ரூபாயிக்கு விற்பனையானது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி