Home /namakkal /

Namakkal | ராசிபுரத்தில் பருத்தி ஏலம் திடீர் ரத்து... அடுத்து எப்போது ஏலம்?

Namakkal | ராசிபுரத்தில் பருத்தி ஏலம் திடீர் ரத்து... அடுத்து எப்போது ஏலம்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Namakkal | நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டியில் பருத்தி ஏலம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாக ஏலம் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rasipuram, India
    நாமக்கல் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கரைப்பட்டிக்கு பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இங்கே பருத்தி பல கோடி ரூபாக்கு விற்பனை நடைபெறும்.

    நாமக்கல்லில் மட்டும் அல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை அக்கரைப்பட்டிக்கு கொண்டு வருகின்றனர். அங்கே, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.

    அதன்படி, ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். மூலம் அக்கரைப்பட்டியில் வாரந்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். இதற்கிடையில், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சாகுபடி செய்து விற்பனைக்கு தயாரிபடுத்தி வைத்துள்ள பருத்தியை ஏலம் நடக்கும் இடத்திற்கு கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு அக்கரைப்பட்டியில் நேற்று (திங்கட்கிழமை) நடக்க இருந்த ஏலத்திற்கு குறைந்த அளவு பருத்தி மூட்டைகளே வந்தன. இதையடுத்து ஆர்.சி.எம்.எஸ்., நிர்வாகம் பருத்தி ஏலத்தை ரத்து செய்தது.

    இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் திங்கட் கிழமை வழக்கம்போல் பருத்தி ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களிடம் இருக்கும் பருத்தியை அப்போது கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி