Home /namakkal /

நாமக்கல்லில் ரூ.1.05 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் ரூ.1.05 கோடிக்கு பருத்தி ஏலம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் விவசாயிகள் கொண்ட வந்த பருத்தி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், செவ்வாய் கிழமை நடந்த ஏலத்தில் ரூ.1.05 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

    வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த ஏலத்தில் நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 ஆயிரம் மூட்டை பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

    ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,311 முதல் ரூ.11,375 வரையில் ஏலம் போனது. சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 10,699 முதல் ரூ.11,915 வரையில் ஏலம் போனது.

    கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,499 முதல் ரூ.9,599 வரையிலும் ஏலம் போனது. நேற்று மட்டும் பருத்தியானது 1.05 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த பருத்திகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிக் சென்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி