Home /namakkal /

நாமக்கல்: வேளாண் சங்கத்தில் ரூ.1.80 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்: வேளாண் சங்கத்தில் ரூ.1.80 கோடிக்கு பருத்தி ஏலம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் நடந்த ஏலத்தில் 1.80 கோடி ரூபாய்க்கு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி ஏலம் போயியுள்ளது.

    நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ளது வேளாண்மை உற்பத்தியாளா்களர்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கம்.

    இந்த சங்கத்தில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறும். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்த பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

    அதன்படி, ஜூலை 26-ம் தேதி நடந்த ஏலத்தில் 4,900 மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா் சிஆா் ஹெச் ரகம் 8,699 ரூபாய் முதல் 10,900 ரூபாய் வரையிலும், சுரபி ரகம் 9,300 ரூபாய் முதல்
    11,125 ரூபாய் வரையிலும், மட்ட ரகம் 4,416 ரூபாய் முதல் 8,639 ரூபாஃ வரையிலும் ஏலம் போனது.

    மொத்தம் 1.80 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. இதை தரம் பிரித்து உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி