முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் வரும் 25ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்..

நாமக்கல்லில் வரும் 25ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்..

நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்ட செய்திகள்

Namakkal News : நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதம்தோறும் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, நேரடியாக, சமையல் கேஸ் நுகர்வோரின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Namakkal, India

சில இடங்களில் சமையல் கேஸ் விநியோகத்தில் எடை குறைபாடு, விலை வித்தியாசம், குறிப்பிட்ட நேரத்தில் ரீஃபில் சிலிண்டர் விநியோகம் செய்யாதது போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதம்தோறும் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, நேரடியாக, சமையல் கேஸ் நுகர்வோரின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலவலக கூட்ட அரங்கில், வருகிற 25ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க : நாமக்கல்லில் ஒரு விஞ்ஞானி.. மில்க் வெண்டிங் மெஷினை உருவாக்கி அசத்திய இளைஞர்..

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமையல் கேஸ் நுகர்வோர்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் சமையல் கேஸ் நிறுவன மேலாளர்கள், சமையல் கேஸ் ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்கள் அடங்கிய சமையல் கேஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, சமையல் கேஸ் சம்மந்தமான விநியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளித்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    First published:

    Tags: Local News, LPG, LPG Cylinder, Namakkal