முகப்பு /நாமக்கல் /

நாமக்கலில் காங்கிரஸ் கட்சியினர் எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 

நாமக்கலில் காங்கிரஸ் கட்சியினர் எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 

எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பாக இன்று  நாடு தழுவிய அளவில் காங்கி

எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பாக இன்று நாடு தழுவிய அளவில் காங்கி

Namakkal Congress Protest | மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முழங்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

அதானி குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கையை மத்திய அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என நாமக்கலில் காங்கிரஸ் கட்சியினர் எஸ்பிஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பாக நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாமக்கல் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளதாகவும் இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை கைவிட வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் சுமார் 70க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Congress, Local News, Namakkal