முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாளை (ஏப் 24) கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்.. 

நாமக்கல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாளை (ஏப் 24) கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்.. 

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்

Namakkal Tamil Development Department | நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 24ம் தேதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாளை (ஏப் 24) கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 - 2023ம் ஆண்டுக்கு, மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாளை (ஏப்ரல் 24ம் தேதி) காலை 9 மணிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வீதம் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள், அந்தந்த கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தைபெற்று நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வழங்குதல் வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Namakkal