ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் ரசாயணம் கலந்த பச்சை பட்டாணி விற்பனை- அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்த அதிகாரிகள்

நாமக்கல்லில் ரசாயணம் கலந்த பச்சை பட்டாணி விற்பனை- அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்த அதிகாரிகள்

X
ரசாயணம்

ரசாயணம் கலந்த பட்டாணி

Namakkal | நாமக்கல்லில் ரசாயணம் கலக்கப்பட்ட பச்சை பட்டாணிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில் பச்சை பட்டாணிக்கு பதிலாக காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து பச்சையாக தெரிவதற்காக பச்சை வண்ணம் சேர்த்து விற்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது.

அந்தப் புகாரைத் தொடர்ந்துநகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சில காய்கறி கடைகளில் காய்ந்த பட்டாணிகளை மூட்டை மூட்டையாக வாங்கி வைத்துபாத்திரங்களில் பச்சை நிறம் கொண்ட ரசாயனப்பவுடர்களை தண்ணீரில் கலந்து அதில் பட்டாணிகள் ஊறவைக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

ஆய்வு செய்யும் அதிகாரிகள் 

உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இது போன்ற நிறம் கலந்த பட்டாணிகளை விற்பனை செய்வது குற்றமென எச்சரித்த அதிகாரிகள் இனிமேல் இதுபோல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

ரசாயணம் கலந்த பட்டாணி

பச்சை பட்டாணி கிலோ ரூ 50 முதல் 80 வரைவிற்கப்படுவதால் குறைவான விலைக்கு பச்சை வண்ணம் பூசப்பட்ட இந்த பட்டாணி விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல் | எலந்தைகுட்டையில் நெல்‌ கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த ஆட்சியர்

அதுபொட்டலமாக பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.‌ இனிமேல் இவ்வாறு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் காய்கறி கடைக்காரர்களை எச்சரித்தனர்.‌ பறிமுதல் செய்யப்பட்ட வண்ணம் பூசப்பட்ட பட்டாணிகள் அழிக்கப்பட்டது.

செய்தியாளர்; பிரதாப், நாமக்கல்.

First published:

Tags: Local News, Namakkal