முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் பிரசித்திபெற்ற கபிலர் மலை கோவில் தேரோட்டம்.. அமைச்சர் மதிவேந்தன் வடம் பிடித்தார்..

நாமக்கல்லில் பிரசித்திபெற்ற கபிலர் மலை கோவில் தேரோட்டம்.. அமைச்சர் மதிவேந்தன் வடம் பிடித்தார்..

X
கபிலர்

கபிலர் மலை கோவில் தேரோட்டம்

Namakkal News : நாமக்கல் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்திபெற்ற கபிலர் மலை பாலதண்டாயுதபாணி சாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர் மலை பாலதண்டாயுதபாணிசாமி கோவிலில் திருத்தேர் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தைப்பூசமான இன்று நாமக்கல் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்திபெற்ற கபிலர் மலை பாலதண்டாயுதபாணி சாமிக்கு சுற்றுவட்டார பகுதியிலுள்ள பக்தர்கள் காவடி, தீர்த்தம் எடுத்து சாமிக்கு அபிஷேக செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

இதனையொட்டி முக்கிய நிகழ்வான அதிகாலை 5 மணியளவில் சாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை பக்தி பரவசத்துடன் “அரோஹரா, அரோஹரா” என பக்தி கோஷங்களையிட்டு மலையை சுற்றி திருத்தேரை இழுத்துச்சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

First published:

Tags: Local News, Namakkal