முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் திருவிழாவிற்கு தயாராகிவரும் தேர்... இரவு பகல் பாராமல் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள்...

நாமக்கல் திருவிழாவிற்கு தயாராகிவரும் தேர்... இரவு பகல் பாராமல் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள்...

X
நாமக்கல்

நாமக்கல் தேர் திருவிழாவிற்கு தயாராகிவரும் தேர்.

Namakkal News| நாமக்கல் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் நரசிம்மர், நாமகிரி தாயாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத தோ்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தேர் திருவிழா கடந்த மார்ச் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு பல்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருத்தேர் உலா வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த தேர் கட்டுமான பணிகளுக்கு நாமக்கல்லை சேர்ந்த தொழிலாளிகள் இரவு பகல் என தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்த தேர் கட்டுமான பணிகள் வருகின்ற 5-ம் தேதி‌ மதியம் முடிவடைய உள்ளதாகவும் அதனை தொடர்ந்து கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க தேரின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கு அடுத்த நாள் ஆஞ்சநேயர், நரசிம்மர் உற்சவர்கள் தேரில் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Namakkal