ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு...! மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுரை...!

நாமக்கல்லில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு...! மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுரை...!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal District Weather Report | நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாவட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (12.10.22) முதல் அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும் (புதன்), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) 28 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 32 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று முறையே வடகிழக்கு, தென்மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் இருந்து 6 கி.மீ, 4 கி.மீ., 4 கி.மீ. வேகத்தில் வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 70 சதவீதமாகவும் இருக்கும்.

இதையும் படிங்க : தீபாவளி பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி பெற வேண்டும் -  நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் மழைக்காலங்களில் இடி, மின்னல் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இடி தாக்குதலில் இருந்து கால்நடைகளை காக்க பண்ணையாளர்கள் கால்நடைகளை மழை வரும் நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது.

மேலும், மந்தையாக மேயும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை மின்னல் தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கால்நடைகளை முள்கம்பி வேலி, மின்கம்பங்கள் அல்லது மரங்களின் அருகில் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

கால்நடை கொட்டகைகளுக்கு அருகில் இருக்கும் மரங்கள் வேரோடு சாய்ந்து அல்லது கிளைகள் முறிந்து கொட்டகையின் மேல் விழுவதை தவிர்க்க மரக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில், கொல்லிமலை-71, சேந்தமங்கலம்-57, மாவட்ட கலெக்டர் அலுவலகம்-39, நாமக்கல்-35, புதுச்சத்திரம்-30, மங்களபுரம்-17, மோகனூர்-14, எருமப்பட்டி-10, திருச்செங்கோடு-3, பரமத்திவேலூர்-2. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 292 மி.மீட்டர் ஆகும்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal, Weather News in Tamil