முகப்பு /நாமக்கல் /

குமாரபாளையத்தில் கையில் குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள்.. களைகட்டிய நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் திருவிழா..

குமாரபாளையத்தில் கையில் குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள்.. களைகட்டிய நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் திருவிழா..

X
நாமக்கல்

நாமக்கல்

Namakkal News | நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குண்டம் இறங்கும் விழாவில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கைகளில் கைக்குழந்தைகளை ஏந்தி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் கோவில் திருவிழாவானது, கடந்த மாதம் 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

மேலும் படிக்க : மாருதி 800 காரை BMW காராக மாற்றியமைத்து நாமக்கல்லில் கெத்தாக வலம் வரும் ஆட்டோ ராஜா.

தீ குண்டம் இறங்குதல்

இதனை தொடர்ந்து தினசரி காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும் பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.

தீமிதி திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அதனை தொடர்ந்து கோவிலின் முன்பு 21 அடி நீளத்திலும் 4 அடி அகலத்திலும், விறகில் தீ இட்டு வைக்கப்பட்டிருந்த குண்டத்தில், தலைமை பூசாரி பூங்கரகத்துடன் தீ மிதித்து விழாவினை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் கடந்த 15 தினங்களாக காவிரியில் புனித நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து கடும் விரதமிருந்த பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று கோஷங்களை எழுப்பி பக்தி பரவசத்துடன், கைக்குழந்தைகளுடன் தீ மிதித்து காளி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Namakkal