முகப்பு /செய்தி /நாமக்கல் / பேருந்தில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

பேருந்தில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

பேருந்தில் தவறி விழுந்து பலியான இளம் பெண்

பேருந்தில் தவறி விழுந்து பலியான இளம் பெண்

Namakkal News | பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி தரையில் விழுந்த கவுசல்யாவின் இறுதி நிமிடங்களின்  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கலில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் கௌசல்யா (வயது 20). ப்ளஸ் டூ வரைபடித்துள்ள இவர் கடந்த இரண்டு மாதங்களாக மல்ல சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் . இந்த நிலையில் நேற்று அவரின் தங்கையை அழைத்துக் கொண்டு கார்மெண்ட்ஸ் நிறுவன பணிக்கு சென்று விட்டு  மாலை  பேருந்து மூலம் வீடு திரும்பினார். அதற்காக ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்தார் .

பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் தங்கையே பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு  அவர் நின்றபடி பயணித்தார் .அப்போழுது சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே சந்திர திரையரங்கு வளைவில் பேருந்து திரும்பிய போது படியின் ஓரம் நின்றிருந்த கௌசல்யா,  பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி,  தவறி கீழே விழுந்தார் .அதில் சாலையோரம் இருந்த  கல்லில் கவுசல்யாவின் தலை மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி தரையில் விழுந்த கவுசல்யாவின் இறுதி நிமிடங்களின்  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர்: சுரேஷ் ( நாமக்கல்)

    First published:

    Tags: CCTV Footage, Local News, Namakkal