ஹோம் /நாமக்கல் /

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்- நாமக்கலில் பொதுமக்கள் பாதிப்பு

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்- நாமக்கலில் பொதுமக்கள் பாதிப்பு

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kumarapalayam (Komarapalayam), India

  கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. தற்போதும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

  தற்போது குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் குறையாமல் இருப்பதால் தொடர்ந்து முகாமில் மக்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள், தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.

  தற்போது, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு திறந்து விடப்படும் 1.80 லட்சம் கன அடி தண்ணீரால் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து கொண்டு ஓடுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்த விடப்படும் தண்ணீர் சற்று குறைந்து இருந்தாலும் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் கரைகளை தாண்டி செல்வதால் வீடுகளுக்கு புகுந்த வெள்ள நீர் குறையாமல் தேங்கி உள்ளது.

  பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் காவிரி வெள்ள நீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதியடைந்தனர். மேட்டூர் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில், நாட்டகவுண்டம்புதுார், ஜனதாநகர், ஆவாரங்காடு, பாவடிதெரு, சந்தைபேட்டை மற்றும் பல பகுதிகள் ஆற்றோரத்தில் உள்ளன.

  இதில், சந்தைபேட்டை பகுதியில், 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், நேற்று காலை வெள்ளம் புகுந்தது. அங்கு வசித்த மக்கள், தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மற்றவர்களுக்கு நகராட்சி மற்றும் போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal