கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் அதிக அளவில் ஆகாய தாமரைகள் சேர்ந்து இருப்பதால் காவிரி ஆறு விவசாய நிலம் போல் காட்சியளிக்கிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய இரண்டு மாவட்டங்களின் கரைகளையும் இணைத்து செல்லும் வகையில் காவிரி ஆறு சென்று கொண்டு இருக்கிறது. இதனை நம்பி விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு விளங்குகிறது. இந்த காவிரி ஆற்றில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளாலும், சாயப் பட்டறைகளின் கழிவுநீர் கலப்பதாலும் தண்ணீர் மாசு அடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

ஆகாயத் தாமரை நிறைந்த காவேரி ஆறு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் சேர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி காவிரி ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீர் மாசு அடைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆகாயத் தாமரை நிறைந்த காவேரி ஆறு
மேலும், ஆகாய தாமரைகள் அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சும் திறன் உள்ளதாகவும் இருக்கிறது. இங்கு மீன் பிடி தொழில் செய்து வருபவர்கள் ஆற்றுக்குள் சென்று வலை வீசி மீன் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கரையோரத்திலும் அதிக அளவில் ஆகாய தாமரைகள் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றுப் பகுதிக்கு குளிக்க செல்பவர்களும் இதனுள் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஆகாயத் தாமரை நிறைந்த காவேரி ஆறு
காவிரி ஆறு பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளதால் இதுபோன்ற சுகாதார சீர்கேடும், ஆற்றில் குப்பைகள், கழிவு நீர் கலப்பதையும் தடுத்து சுகாதார முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.