Home /namakkal /

குமாரபாளையம் பகுதியில் தீவனப்புல் வியாபாரம் மந்தம்...

குமாரபாளையம் பகுதியில் தீவனப்புல் வியாபாரம் மந்தம்...

நாமக்கல்

நாமக்கல் தீவனப்புல்

Namakkal News | தற்போது கோடை மழை தொடர்ந்து பெய்ததால் சோளத்தட்டு அழுகியும், காய்ந்தும் வாங்குவதற்கு ஆட்கள் வீணாக சென்று கொண்டு இருக்கிறது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஆடு மாடுகளுக்கு தீவனமாக பயன்படும் சோளத்தட்டு வியாபாரம் சாலையோரத்தில் ஏராளமான வியாபாரிகள் செய்து வருகின்றனர்.தற்போது போதிய வியாபாரம் இன்றி இருப்பதால் சிரமத்திற்கு ‌உள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    குமாரபாளையம் பகுதியில் ஆடு மாடு வைத்து இருப்பவர்கள் சோளத்தட்டு இல்லாமல் அவதிப்பட்டு வருவார்கள். மேலும் அதிகமாக இறைச்சி கடைகள் உள்ளதால் ஆடு மாடுகளுக்கு தீவனமாக சோளதட்டு தேவைபடும். இதனால் இவர்களின் தேவை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் இங்கு சோளத்தட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் கோடைக்காலத்தில் மாட்டுத் தீவனமாக இருக்கும் சோளத்தட்டு அதிக அளவில் வியாபாரம் செய்யப்படும். ஆனால் தற்போது கோடை மழை தொடர்ந்து பெய்ததால் சோளத்தட்டு அழுகியும், காய்ந்தும் வாங்குவதற்கு ஆட்கள் இன்றி வீணாகி கொண்டு இருக்கிறது. ஒரு‌ கட்டு சோளத்தட்டு குறைந்தது 20 ரூபாய் வரை‌ விற்கப்படும்.‌ ஆனால் தற்போது 5 ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுகிறது.

    மேலும் இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஒவ்வொருவரும் பல
    வருடங்களாக இந்த வியாபாரத்தை செய்து வருகிறோம். வண்டி மாடு வைத்து இருக்கும் போது அதற்கு தீவனம் இல்லாமல் காடு காடாக சுற்றிக்கொண்டு இருந்தோம். பிறகு இதுபோன்று நிறையபேர் இருப்பார்கள் என்று அறிந்து நாங்களே நேரிடையாக சென்று சோளத்தட்டை வாங்கிக் கொண்டு வந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தோம். அதுவே முழு நேர‌ வேலையாக மாறி விட்டது.

    மாட்டு வண்டி வைத்து இருப்பவர்களுக்கு சோளத்தட்டு அதிக அளவில் தேவைப்படும். ஆனால் தற்போது அதெல்லாம் இல்லாமல் சென்றது எங்களுக்கு பெரிய இழப்பு. மேலும் இங்கு உள்ளவர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு வாங்கி செல்வார்கள். அவர்கள் நம்பி தான் இந்த வியாபாரமே நடந்து கொண்டிருக்கிறது.

    நாங்கள் மொத்தமாக காட்டுக்காரகளிடம் வாங்கிக் கொண்டு வந்து இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது கோடை மழை மற்றும் வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் வியாபாரம் இன்றி தவித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி