முகப்பு /நாமக்கல் /

தனியார் சேனல்களின் கட்டண உயர்வு.. நாமக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்!

தனியார் சேனல்களின் கட்டண உயர்வு.. நாமக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட  கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

Namakkal protest | நாமக்கல் மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

தனியார் கேபிள் டிவி சேனல்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி நாமக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் கட்டண சேனல்களின் கட்டண விலையை உயர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரைத்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட தனியார் சேனல்களின் உரிமையாளர்கள் கட்டணத்தை அதிகமாக உயர்த்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேபிள் டிவி கட்டண சேனல்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், தனியார் சேனல் உரிமையாளர்களுக்கு துணை போவதாக மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும் ஆணையத்திற்கு எதிராக நாமக்கல் மாவட்ட தமிழககேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

First published:

Tags: Cable Tv, Local News, Namakkal