முகப்பு /நாமக்கல் /

சீமானின் உருவ பொம்மை எரிப்பு.. நாமக்கல்லில் கொந்தளித்த விடுதலை களம் அமைப்பினர்..!

சீமானின் உருவ பொம்மை எரிப்பு.. நாமக்கல்லில் கொந்தளித்த விடுதலை களம் அமைப்பினர்..!

போராட்டம்

போராட்டம்

Namakkal Protest | நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து விடுதலை களம் அமைப்பினர் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருவபொம்மை எரிப்பு. சீமானுக்கு எதிராக விடுதலை களம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது நாயக்கர் சமூகத்தை பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை களம் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர் திடீரென தாங்கள் கொண்டு வந்த சீமான்உருவ பொம்மையை எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை பிடுங்கி சென்றனர்.

இதையடுத்து விடுதலை களம் அமைப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Namakkal, Protest, Seeman