Home /namakkal /

கறிக்கோழி, முட்டை விலை அதிரடியாக உயர்வு - கலக்கத்தில் அசைவ பிரியர்கள்..

கறிக்கோழி, முட்டை விலை அதிரடியாக உயர்வு - கலக்கத்தில் அசைவ பிரியர்கள்..

கறிக்கோழி

கறிக்கோழி

Namakkal District: நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழி, முட்டை விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிலோவுக்கு  12 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. தற்போது கறிக்கோழி விலை கிலோ 127 ரூபாய் ஆக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முட்டைக்கோழி விலையில் மாற்றம் செய்யப்படாமல் கிலோ ரூபாய் 75-க்கு அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முட்டை விலை:

    இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 65 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 25 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை அதிரடியாக உயர்ந்து 3 ரூபாய் 90 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிற மண்டலங்களில் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் மக்களிடையே முட்டை விற்பனை சற்று அதிகரித்து உள்ளதாலும் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 25 காசுகள் விலை உயர்த்தி ஒரு முட்டையின் விலை 3 ரூபாய் 90 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு பிறகு முட்டை விலை அதிரடியாக உயர்வு சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி