Home /namakkal /

நாமக்கலில் அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர இலவச பயிற்சி முகாம்- பா.ஜ.க சார்பில் ஏற்பாடு

நாமக்கலில் அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர இலவச பயிற்சி முகாம்- பா.ஜ.க சார்பில் ஏற்பாடு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அக்னிவீர் திட்டத்தில் சேருவதற்கு பா.ஜ.க சார்பில் இலவச பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rasipuram, India
    அக்னிவீா் -2022 திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான இலவச பயிற்சி முகாம் ராசிபுரம் அருகே உள்ள மசக்காளிபட்டியில் ஆகஸ்ட் 17-இல் துவங்கி நடைபெறும் என பாஜக
    நாமக்கல் மாவட்ட முன்னாள் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மசக்காளிபட்டி ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, கஸ்தூரிபா காந்தி கல்லூரி வளாகத்தில், ஆகஸ்ட் 17ல் துவங்கி 28ம் தேதி வரை அக்னிவீர்-2022 திட்டத்தில் ராணுவத்தில் சேருவதற்கான இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

    ராணுவத்தில் சோ்வதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப்படைக்கு 12ம் வகுப்பு தோ்ச்சி அவசியம். 17.5 வயதிற்கு மேற்பட்ட 23 வயது வரை உள்ளவா்கள் இதில் பங்கேற்லாம்.

    உயரம் 166 செ.மீ இருக்க வேண்டும். மருத்துச் சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ், என்சிசி சான்றிதழ் இருப்பின் கூடுதல் தகுதியாகும். ஆண், பெண் இருவருக்கும் தங்கும் இடவசதி உள்ளது.

    பயிற்சியின்போது ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் புகைப் படம், நோட்டு, பேனா, பென்சில், ரப்பா் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் கொண்டு வர வேண்டும்.

    இந்த முகாமில் லெப்டினனட் என்.கே.ராமன், மேஜா் மதன்குமாா் ஆகியோா் பங்கேற்று பயிற்சி, ஆலோசனை வழங்குகின்றனா்.

    இவ்வாறு பா.ஜ.க மத்திய திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவா் ஆா்.லோகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி