Home /namakkal /

Namakkal : மூங்கில் மூலம் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கனுமா..

Namakkal : மூங்கில் மூலம் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கனுமா..

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District : பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் மூங்கிலால் ஆன விவசாயம் சார்ந்த பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை செய்து வருகிறார் சந்தைபேட்டையைச் சேர்ந்த கண்ணன்.

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் உள்ள சந்தைப்பேட்டை என்ற பகுதியில் சிறிய கடை வைத்து நடத்தி வருகிறார் கண்ணன்.  இவருடைய கடையில் விவசாயத்திற்கு தேவைப்படும் ஏணி முதல் கூடை வரை என அனைத்துப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளது.  வீட்டு உபயோகத்திற்கு தேவையான பாய், விசிறி ,மூங்கில் கூடை, சமையல் செய்வதற்கு தேவைப்படும் பொருட்களான மரக்கரண்டி,உருளை போன்ற பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மூங்கிலால் ஆன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ஒரு இயற்கையான சூழலை உருவாக்க முடியும். மண் வளத்திற்கு தீங்கு விளைவிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து இதுபோன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றேன் என்கிறார் கண்ணன்.

    மூங்கில் மூலம் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக பொருட்கள்


    " கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மூங்கில் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றேன். இதற்கு முன்னதாக எனது அம்மா வீட்டில் மூங்கிலை வைத்து கைகளாலே விவசாயத்திற்கு தேவைப்படும் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். அதன்பின் சிறிய கடை போன்று வைத்து தொடர்ந்து வீட்டிற்கு தேவையான பொருட்களும் தற்போது விற்பனை செய்து வருகிறோம்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    மேலும் மூங்கில் பொருட்களை மட்டும் விற்பனை செய்வதற்கு காரணம், விவசாய நிலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதாவது பயன்படுத்திவிட்டு அதனை அங்கேயே போட்டு விட்டு சென்றால் நிலத்தின் தன்மை பாதிக்கக்கூடும். ஆனால் மூங்கிலால் ஆன கூடைகள் விவசாயிகள் பயன்படுத்தும் போது இதுபோன்ற பிரச்சினைகள் வராது. அதுமட்டுமின்றி மக்களும் இதனை உணர்ந்து பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கும், மண்வளத்திற்கும் எந்தவொரு தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பு முடியும் என்பதற்காக தான் இன்றளவும், லாபம் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் தொடர்ந்து மூங்கில் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றேன் என்று தெரிவித்தார்.

    மேலும் மூங்கில் பொருட்களின் விலை உள்ளிட்ட விவரம் பெற 9865046660, 9488505922 என்ற எண்களில் கண்ணனை தொடர்பு கொள்ளலாம்..

    திருச்செங்கோட்டில் இருந்து சந்தைப்பேட்டைக்கு செல்லும் பாதையை கட்டும் கூகுள் வரைபடம்..



    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி