முகப்பு /நாமக்கல் /

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து நாமக்கல்லில் விழிப்புணர்வு பிரச்சாரம்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து நாமக்கல்லில் விழிப்புணர்வு பிரச்சாரம்

X
மாதிரி

மாதிரி படம்

Awareness Campaign In Namakkal : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்! எதிர்காலத்தை வளமாக்குவோம்!! எனும் தலைப்பில்  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியாருக்கு இணையாக பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், காலை உணவுத் திட்டம், வாசிப்பு திறனை வளர்க்க தேன்சீட்டு எனும் சிறார் இதழ், நூலகத்திற்கென்று தனி நேரம், இதழ்களின் படைப்புகளிலிருந்து வினாடி வினா போட்டிகள், இலக்கிய ஆர்வத்தை வளர்க்க பேச்சு, கட்டுரைப் போட்டிகள் உட்பட இலக்கிய மன்ற செயல்பாடுகள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம், ஆட்டக்கலைகள், இசை, நாடகம் ஓவியம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் பள்ளியில் பயிற்சி, பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், ஆண்டுதோறும் மாநில அளவிலான கலைத் திருவிழா, சிறார் திரைப்பட விழா, சிறார் இலக்கிய திருவிழா, விளையாட்டு போட்டிகள் வானவில் மன்றப் போட்டிகள், வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டுகளுக்கு கல்விச் சுற்றுலா, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தனிச் சிறப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் 3 பிரசார வாகனங்கள் 5 ஒன்றியத்திற்கு ஒரு வாகனம் வீதம் மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. இவ்வாகனங்கள் மூலம் 19.04.2023 முதல் 28.04.2023 வரை விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் இந்த கல்வி ஆண்டில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பாலசுப்பிரமணி, உதவி திட்ட அலுவலர் குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Education, Local News, Namakkal