ஒரு ரூபாய் கல்வி திட்டத்தின் மூலம் சாலையோர குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் கல்விக்காக தமிழகம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதலாவது பிரச்சார பயணம் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர்கள் கொடி அசைத்து நாமக்கல்லில் -atதொடங்கி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பு (TSRO) மூலம் சாலைகளில் சுற்றித்திரியும் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளின் கல்விக்கு உதவிட வேண்டும் என்று நல்நோக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000 கிலோமீட்டர் நான்கு சக்கர வாகனம் மூலம் பயணித்து விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கே.எஸ்ஆர் கல்லூரியில் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் சாலையோர குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் வெளியிட்டனர். இதில் தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பினர், சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இது குறித்து தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பினர் கூறுகையில், சாலையோரத்தில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், பேருந்து நிலையத்தில் பணம் கேட்டு சுற்றி வரும் குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் கல்விக்காக உதவிட வேண்டும் ஓர் முயற்சியில் இறங்கி உள்ளோம். அதன் முயற்சியாக எங்கள் அமைப்பு உள்ள மாணவர்கள் தினமும் 1 ரூபாய் செலுத்தி சேமித்து வருகிறோம்.
ஓர் மனிதன் தினமும் அநாவசியமாக செலவும் செய்யும் பணத்தில் இருந்து 1 ரூபாய் இது போன்று படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளின் கல்விக்காக உதவிட வேண்டும் என்று ஓர் நோக்கத்தோடு மற்றும் மக்களிடையே இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக முழுவதும் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பயணத்தை தொடங்கி உள்ளோம்.
இதில் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளாமல், பல தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சேர்ந்து உதவிட வேண்டும். ஏனென்றால் இது நீண்ட தூர முயற்சி. இதில் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரின் ஆதரவும் வேண்டும்.
ஆகையால் மக்கள் ஒரு நாளைக்கு தேவையற்ற செலவுகள் செய்யும் பணத்தில் இருந்து 1 ரூபாய் செலுத்தி சாலையோர குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் கல்விக்காக உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.