முகப்பு /நாமக்கல் /

நடிகர் விஜய்யின் ரத்த தான மென்பொருள் குறித்து விழிப்புணர்வு.. நாமக்கல்லில் துண்டு பிரசுரம் விநியோகம்..

நடிகர் விஜய்யின் ரத்த தான மென்பொருள் குறித்து விழிப்புணர்வு.. நாமக்கல்லில் துண்டு பிரசுரம் விநியோகம்..

X
நடிகர்

நடிகர் விஜய்யின் ரத்த தான மென்பொருள் குறித்து விழிப்புணர்வு

Actor Vijay's Blood Donation Software : நாமக்கல் மாவட்டத்தில்  விஜய் மக்கள் இயக்கத்தின் மேற்கு மாவட்ட இளைஞரணி  சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். 

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயின் ரத்ததானம் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளில் ஒருவருடைய செல்போன் எண், ரத்த வகை, முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படும் நேரத்தில் ரத்தத்தின் வகை மட்டும் பதிவிட்டால்போது, அருகாமையில் அந்த ரத்த வகை கொண்ட நபர்களின் செல்போன் எண் மற்றும் முகவரி ஆகியவை வந்து விடும்.

நடிகர் விஜய்யின் ரத்த தான மென்பொருள் குறித்து விழிப்புணர்வு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், இந்த மென்பொருள் குறித்து நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தின் இரத்தம் மென்பொருளில் பொதுமக்களை பதிவு செய்ய வைத்தனர். இதில் மேற்கு மாவட்ட இளைஞரணி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

top videos
    First published:

    Tags: Actor Vijay, Local News, Namakkal