பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர். கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்திற்கு பின்னர் கடந்த சில மாதங்களாக பௌவுர்ணமி முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலையைச் சுற்றி கிரிவலம் சென்று வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் பௌவுர்ணமி அன்று உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்தது பிறகு கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
முன்னதாக மலை அடிவாரம் முன்பு விளக்கு மற்றும் சூடம் ஏற்றி கிரிவலத்தை பக்தர்கள் இன்று தொடங்கினார்கள். மாலை முதல் சுமார் நான்கு கிலோமீட்டர்க்கு மேல் கொண்ட மலைப்பாதை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
மேலும் அர்த்தநாரீஸ்வரர் வழிபடுவது என்பது மனதுக்கு நிறைவை கொடுத்துள்ளது. உடல் நலத்துடனும், மகிழ்விடனும் வாழ இறைவனை வேண்டிக் கொண்டு கிரிவலம் வருகிறோம் என்று தெரிவித்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.