Home /namakkal /

மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்ற அர்த்தநாரீஸ்வரர்- ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தரிசனம்..

மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்ற அர்த்தநாரீஸ்வரர்- ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தரிசனம்..

அர்த்தநாரீஸ்வரர்

அர்த்தநாரீஸ்வரர்

Thiruchengode Arthanareeswarar Temple Festival 2022: மேளதாளத்துடன், சிறுவர் சிறுமியர்களின் சிலம்ப நிகழ்ச்சிகளுடன் மின்விளக்கு அலங்காரத்துடன் அர்த்தநாரீஸ்வரர் ஊர்வலமாக வரும் காட்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தற்போது இந்தாண்டு திருவிழா சில நாட்களுக்கு முன்பு திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    அதனைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் மலையிருந்து பல்லக்கில் பக்தர்களால் தூக்கி கொண்டு நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதனையடுத்து, அந்தந்த வகையறாவின் சிறப்பு மண்டபக் கட்டளைகள் மற்றும் சுவாமி வரவேற்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. அதன் பின் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் நான்காம் திருவிழா முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர், முருகன், பெருமாள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூப்பல்லக்கில் நான்கு ரத வீதி வழியாக மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வரப்பட்டது.

    இதில் மேளதாளத்துடன், சிறுவர் சிறுமியர்களின் சிலம்ப நிகழ்ச்சிகளுடன் மின்விளக்கு அலங்காரத்துடன் அர்த்தநாரீஸ்வரர்
    ஊர்வலமாக வரும் காட்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து, ஐந்தாம் நாள் திருவிழா, ஆறாம் நாள் விழா, ஏழாம் விழா என தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் ஒன்பதாம் நாள் திருவிழாவாக விநாயகர் தேர், செங்கோட்டு வேலவர் தேர் என முதற்கட்டமாக தேர்கள் வடம் பிடித்து இழுக்க உள்ளனர். அதன் பின் ஆசியாவிலே மிகப் பெரிய தேர்களில் நான்காவது தேராக கருத்தப்படும் அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா தொடங்கப்பட்டும், அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலிருந்து நகருக்கு எழுந்தருளி உள்ளதால் சுவாமி காண மிகுந்த ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.

    செய்தியாளர்:  மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal, Thiruchengode

    அடுத்த செய்தி