Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 15) எந்தெந்த பகுதியில் மின்தடை..  விவரங்கள் இதோ!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 15) எந்தெந்த பகுதியில் மின்தடை..  விவரங்கள் இதோ!

நாமக்கல்

நாமக்கல் - மின் தடை அறிவிப்பு

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி மற்றும் ராசிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூன் 15) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் சரியாக உள்ளதா மற்றும் மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கபட்டு வருகிறது. இதனிடையே நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி மற்றும் ராசிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ( ஜூன் 15 - புதன்கிழமை)  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆகையால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நலவடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் இராசிபுரம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    அதன்படி ராசிபுரம், முத்து காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், வடுகம்,
    கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம்,மோளப்பாளையம், அரசம்பாளையம்,
    வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி