ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வில்வித்தை பயிற்சி தொடக்கம்...

நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வில்வித்தை பயிற்சி தொடக்கம்...

வில்வித்தை பயிற்சி பெறும் மாணவிகள்

வில்வித்தை பயிற்சி பெறும் மாணவிகள்

Namakkal | நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச வில்வித்தை பயிற்சி வகுப்புகள் துவங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  மாணவிகளுக்கு இலவச வில்வித்தை பயிற்சி வகுப்புகள் துவங்கியது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு வில்வித்தை கற்பிக்கும் வகையில் இலவசமாக இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் மற்றும் இலவசமாக வில்வித்தை கற்றுக் கொள்ள விருப்பம் உள்ள 30 மாணவிகள் ஆர்வத்தோடு பயிற்சி பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த பயிற்சிக்கு பிறகு தேர்வு செய்யப்படும் மாணவிகள், பள்ளிகளுக்கு இடையேயான வில்வித்தை போட்டிகளில் பங்கேற்க உதவிகள் மேற்கொள்ளப்படும். இதேபோல் பள்ளிபாளையம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுகிழமை தோறும் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 வரை இலவச பயிற்சி அளிக்கப்படும்.

இதையும் படிங்க : தீபாவளி பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி பெற வேண்டும் -  நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு

இதுகுறித்து பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “வில்வித்தை கற்றுக்கொள்ளும்போது மனநிலை மற்றும் யோசிக்கும் திறன் மிகவும் கூர்மையாக இருக்கும். ஏனென்றால் அம்பு விடும்போது காற்றின் திசை அறிந்து அதற்கு ஏற்றார்போல் குறி வைத்தால் தான் இலக்கை சரியாக சேரும். வில்வித்தை கற்றுக்கொள்ளும் மாணவன் காற்றின் திசை அறிவது மட்டுமின்றி அதிக திறனுடன் யோசிக்கும்போது வாழ்க்கையில் நல்ல சிந்தனைகளை நினைத்து வெற்றி அடைய முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒரு செயலை செய்யும்போது நம்மை மிகவும் தைரியத்துடன் வைத்து கொள்ள உறுதியானகவும் இருக்கும். வில்வித்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். நம் மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

செய்தியாளர் : மதன்குமார்.S

First published:

Tags: Local News, Namakkal