நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 17ம் தேதி ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல், மோகனூர் சாலையில், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றி மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி மீன்களுக்குத் தேவையான உணவு விகிதாச்சாரத்தை குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வழிமுறைகள் பற்றியும், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு, நோய், நீர் மேலாண்மை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மாநில, மத்திய அரசுகள் மீன் வளர்ப்புக்கு வழங்கும் மானியம் குறித்தும் இப்பயிற்சியில் விளக்கி கூறப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் 04286 266345, 266650 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal