நாமக்கல் மாவட்டத்தில் காசநோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் நடப்பாண்டில் 90 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சிறப்பாக பணியாற்றி டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயங்கள் வழங்கி, விழிப்புணர்வு கையேடு மற்றும் குறும்படம் வெளியிட்டார். அப்போது அவர் பேசியாதவது:- “உலகம் முழுவதும் காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச காச நோய் தினம் ஆண்டு தோறும் மார்ச் 24 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் குறித்து பல்வேறு விழிப்ப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு 1,066 நபர்களுக்கு சளிப் பரிசோதனை என்ற நிலையில் இருந்ததை, கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேரில் 2,773 பேருக்கு சளிப் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு 3,250 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் காசநோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் 90 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் இறப்பு சதவீதம் 9 இல் இருந்து 8 ஆக குறைந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வரும் ஆண்டில் 6 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் காசநோய் தடுப்பு மாத்திரை (3எச்பி) வழங்கப்பட உள்ளது என கூறினார்.
நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், காசநோய் துணை இயக்குநர் வாசுதேவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், தொழுநோய் துணை இயக்குநர் ஜெயந்தினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal