ஹோம் /நாமக்கல் /

குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சமூக விரோதிகள் - நாமக்கல்லில் விசிக ஆர்ப்பாட்டம்

குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சமூக விரோதிகள் - நாமக்கல்லில் விசிக ஆர்ப்பாட்டம்

X
 வேங்கைவயல்

 வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு

Namakkal Vck Protest | தமிழகத்தில் நடைபெறும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிகவினர் முழக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நாமக்கலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த குற்றவாளிகளை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக புதுக்கோட்டை காவல்துறை சித்தரிப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழகத்தில் நடைபெறும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் அப்பகுதி மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் காவல்துறை முயற்சி கைவிட வேண்டும் என்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Namakkal, VCK